நேபாளத்தின் துயரம் …. கவிதை…. ஆர்.மாலினி- கொட்டகலை

புத்தர் பிறந்த இடம்..
புனித யாத்திரைக்கு உரிய இடம்..
இலங்கையும் இரண்டர நேசிக்கும் இடம்..
எதனாலும் யாராலும்
ஆக்கிரமிக்கப்படாத ஒரே இடம்…..
என்றாலும் அங்கு ஆக்கிரமித்தது
சொல்லிலடங்கா சோகம் இன்று…
இமைய மலையின் இதயமாம்
உயரமான எவெரெஸ்ட் சிகரத்தை
தன்னகத்தே கொண்ட இடம்.
எப்படி இப்படி நேர்ந்ததோ …
யார் கண் பட்டதோ
கண் இமைக்கும் நேரத்தில் கட்டாந்தரை ஆனதோ…
நேசம் கொண்ட நேபாள் நாட்டின்
நேர்ந்த சோகம்
நெஞ்சை உளுக்கி போகுதிங்கே…
பனிப்பாறைகள் பிளந்து பாரிறங்கி
பாவக்கணக்கைகை பார்த்ததுவோ..
பாலம் எல்லாம்
கீழிறங்கி பாதாளம் காண கிளம்பியதோ…
நிலமும் கொஞ்சம் தாழிறங்கி
அதட்கும் பாதை காட்டியதோ..
ஆட்கள் மொத்தம் அலறிக்கொண்டே
ஆயுள் வேண்டி ஓடினரோ…
ஆவேசம் கொண்ட வெள்ளம் வந்து
மாக்கள் மீது ஏறியதோ…
ஆற்று தண்ணீர் கரை புரண்டு
ஆளை தூக்கி வீசியதோ…
சேற்றுக்குள்ளே சிக்கி உயிர்கள்
சேதாரமாய் தான் ஆனதுவோ…
ஓடும் கூட்டம் ஒரு பக்கம்..
உறவை தேடும் கூட்டம் மறுபக்கம்
சட்டென பாய்ந்த சாத்தான் போல சகலமும்
மிரட்டி போனதோ… சரித்திரம் காணா
பேரழிவொன்றை சடுதியில் நிகழ்த்தி சென்றதுவோ…
கையிலாய யாத்திரை சென்ற மக்கள்
கைலாசம் போக நேர்ந்ததுவோ…
கத்தி இன்னும் கதறும்
சிறுவர் காயம் எப்போ ஆறிடுமோ..
காணாமல் போன உயிர்கள் எல்லாம்
பிழைத்தே வீடு திரும்பிடுமா ..
இல்லை பிணமாகி நெஞ்சை வதைத்திடுமா…

![]()