பலதும் பத்தும்

கனடாவில் பெண் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற விசித்திர விருந்தினர்

கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த ஜானிஸ் ஆண்டர்சன் என்பவரது வீட்டின் தோட்டத்தில், ஆகஸ்ட் 27 அன்று தாய் காட்டுப்பூனை ஒன்று தனது ஐந்து குட்டிகளுடன் நுழைந்தது.

அண்டை வீட்டார் கொடுத்த தகவலையடுத்து, தனது வளர்ப்பு நாயை வீட்டிற்குள் பூட்டிவிட்டு ஆண்டர்சன் உடனடியாகத் தனது கேமரா மற்றும் கைப்பேசியுடன் தோட்டத்திற்கு விரைந்தார்.

அங்கு காட்டுப்பூனைகள் மிகவும் அமைதியாகத் தோட்டத்திலும், வீட்டின் முன்பக்கப் புல்வெளியிலும் அமர்ந்து ஓய்வெடுத்தன. தாய் காட்டுப்பூனை புல்வெளியில் சாவகாசமாகப் படுத்துக் கொண்டது.

சில நிமிடங்களிலேயே அவை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும், ஆண்டர்சன் அவற்றின் அழகிய தருணங்களைத் தனது கேமராவில் துல்லியமாகப் படம்பிடித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்புதான் வனவிலங்கு புகைப்படக் கலையை ஒரு பொழுதுபோக்காகத் தொடங்கிய ஆண்டர்சன், காட்டுப்பூனை குடும்பம் நேரடியாகத் தனது வீட்டிற்கே வந்து புகைப்படங்களுக்குப் பொஸ் கொடுத்ததை வாழ்நாளின் மறக்க முடியாத அரிய வாய்ப்பாகவும் கௌரவமாகவும் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *