பலதும் பத்தும்
மெஸ்ஸிக்காக 10ஆவது நிமிடத்தில் போட்டிகள் நிறுத்தம்

ஆர்ஜென்டீனாவிலிருந்து லியனல் மெஸ்ஸி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மெஸ்ஸியைக் கெளரவிக்கும் முகமாக ஆர்ஜென்டீனா கால்பந்தாட்டச் சங்கமானது இவ்வாரயிறுதியில் அனைத்து உள்ளுர்ப் போட்டிகளையும் 10ஆவது நிமிடத்தில் ஒரு நிமிடம் கரகோஷம் எழுப்புவதற்காக இடைநிறுத்தவுள்ளது.
காணொளிப் பலகைகளைக் கொண்டிருக்கும் அரங்கங்கள் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் மெஸ்ஸிக்கு மரியாதை செலுத்தும் காணொளியொன்றை காண்பிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
![]()