இலங்கை
யாழில் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு

யாழ்.தெல்லிப்பழையில் அமைக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி நேற்று முன்தினம் திங்கட்கிழமை இனம்தெரியாத விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாகத் தெல்லிப்பழைப் பொலிஸிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துக்குத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பலரும், தமிழ்த்தேசிய வாதிகளும் பொது அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தெல்லிப்பழை ஆஸ்பத்திரி வீதியில் ,தெல்லிப்பழை சேமக்காலையில் செல்வநாயகம் நினைவு அறக் கட்டளையினரால் மேற்படி நினைவுத் தூபி 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்-23 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
![]()