கைதிகள் இனி வீட்டுக் காவலில்!; சட்டத் திருத்தம் வருகிறது

கைதிகளை வீட்டுக்காவலில் வைப்பதற்கான சட்டத் திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதித்துறை கட்டமைப்பில் பல்வேறு திருத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைத்தல், அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை விரைவுபடுத்துதல், பிணை வழங்க முடியாதவர்களுக்கு பிணை வழங்குவதற்குத் தேவையான சட்டச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், சிறைக்கு வெளியே இவ்வாறானவர்களை வீடுகளில் தடுத்து வைத்து தங்களது தண்டனைக் காலத்தைக் கழிக்கச் செய்தல் போன்ற பல சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுச் சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. இந்த ஒட்டுமொத்த செயல்பாட்டினைக் கருத்தில் கொண்டே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதையும் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.
![]()