பலதும் பத்தும்

புதிய வைரஸுகளுக்கு ஏற்ப தன்னை தகவமைக்கும் திறன்

வௌவால்கள் அவற்றின் அளவிற்கு மிக நீண்ட காலம் வாழும் பாலூட்டிகளாகும், மேலும் அவை வைரஸ்களுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும், தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் திறன் பெற்றுள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய வைரஸ்களை எதிர்க்கும் மற்றும் புற்றுநோயைத் தடுக்கும் வௌவால்களின் திறன் மனிதர்களுக்கு உபயோகப்படுமா என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

இது தொடர்பான ஆய்வு கட்டுரை நேச்சர் இதழில் பிரசூரிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வின் முடிவுகள் வௌவால்களின் வயதாவதைத் தாமதப்படுத்தும் மற்றும் வைரஸ்களைத் தாங்கிக்கொள்ளும் திறன் மரபணு ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே உயிரியல் ‘தந்திரங்கள்’ தான் அவற்றை நோய்த்தொற்றுகள் மற்றும் முதுமையின் சிதைவு ஆகிய இரண்டிலிருந்தும் பாதுகாக்கின்றன என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.

ஆக வௌவால்களின் இந்த தனித்துவமான திறன் மனிதர்களுக்கு உபயோகப்படுமா என்பதை தற்போது ஆய்வாளர்கள் கவனித்து வருகின்றனர்.

இந்த ஆய்விற்காக 32 இனங்களைச் சேர்ந்த 259 வௌவால்களின் செல் வளர்ப்புகள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button