இலங்கை

அரசு வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத்தி; 22 க்கு எதிராகப் பாரிய அணி உருவாகிறது!

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் சகல தரப்பினரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தலைமையில் இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றது.

கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனான பொது அறிக்கையில் கைச்சாத்திட்டனர்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தவறானது என்று அரசாங்கத்திற்கு வலியுறுத்தும் வகையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த அரசியலமைப்பு திருத்தத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த அமைப்புகள் தங்களுடன் இணைந்துள்ளன என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button