‘மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி’; மைத்திரிக்கு கௌரவ விருது

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ‘மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி’ என விசேட பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு அலரி மாளிகையில் 29ஆம் திகதி நடைபெற்ற ‘குளோபல் பிரேன்ட் அவார்ட் 2026’ என்ற சர்வதேச விருது வழங்கள் விழாவிலேலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னனி வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள், பெண் தலைவர்கள் மற்றும் பல சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் பங்கேற்புடன் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பிரதம விருந்தினராக மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டதுடன், புகழ்பெற்ற ‘கேஜீஎப்’ திரைப்படம் மூலம் சர்வதேச புகழ் பெற்ற இந்திய நடிகர் கருடா ராம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்
இதன்போது நாட்டின் அரசியல் வரலாற்றில் சிறிசேனவின் பங்களிப்பு மற்றும் அவரின் சேவையைப் பாராட்டி, விழாவின் ஏற்பாட்டுக்குழுவினால் அவருக்கு இந்த சிறப்புமிக்க கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
![]()