பலதும் பத்தும்

நேபாள வெள்ளத்தில் தப்பிய பச்சை வீடு

நேபாளத்தில் கடந்த 26ம் தேதி பனிப்பாறை சரிந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 800 பேர் உயிரிழந்துள்ளனர், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

ஆற்றங்கரையில் இருந்த வீடுகள் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டன, இதில் பிதூர் பகுதியில் திரிசூலி ஆற்றங்கரையில் மலைச்சரிவில் அமைந்திருந்த பச்சை நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட வீடு ஒன்று வெள்ளத்தில் அசராமல் இருந்தது.

இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகின, வீட்டின் முதல் தளத்தில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர், இந்த வீடு மட்டும் வெள்ளத்தை எப்படி தாங்கியது என்பதே பலரது கேள்விக்குறியாகவுள்ளது.

வீட்டின் அருகில் இருந்த மரம் மற்றும் பக்கத்துவீட்டின் காரணமாக வெள்ள நீர் பச்சை நிற வீட்டை நேரடியாக தாக்காமல் இருந்திருக்கலாம்.

மேலும் பச்சை நிற வீட்டின் முன்புறம் பாய்ந்த நீர் மிதமான வேகத்தில் சென்றதும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

அந்த வீ்ட்டில் இருந்த பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

நேபாள வெள்ளத்தில் தப்பிய பச்சை வீடு | The Green Building Not Fall Nepal Flood

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button