நேபாளப் பெருவெள்ளம்; காணாமல் போன பிரித்தானியர்கள் எண்ணிக்கை 48 என உயர்வு

நேபாளத்தில் காணாமல் போன பிரித்தானியர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் காணாமல் போன பிரித்தானியர்களின் எண்ணிக்கை 48-ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிருடன் இருப்பதற்கான
உடல்களை அடையாளம் காண்பதற்கு முன்னரே அவற்றை அடக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் அங்குள்ள அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
பயங்கரமான வெள்ளத்தில் மரணமடைந்த சுமார் 800 பேர்களில் 20 பேர்களின் உடல்கள் மட்டுமே குடும்பத்தினர் அடையாளம் கண்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், காணாமல் போனாதாக நம்பப்படும் நபர்களின் உறவினர்கள் நிரம்பி வழியும் மருத்துவமனைகளிலும் பிணவறைகளிலும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
2,400-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து காணாமல் போயுள்ள நிலையில், அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவு என்றே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
திபெத்தில் 15 பிரித்தானியர்கள் காணாமல் போனதாக சீனா தெரிவித்ததை அடுத்து, தற்போது காணாமல் போன பிரித்தானியர்கள் எண்ணிக்கை 48 என அதிகரித்துள்ளது.
பேரிடரின் போது சீனாவும் நேபாளமும் தனித்தனியான, பெரும்பாலும் மாறுபட்ட புள்ளிவிவரங்களை அறிவித்து வருவதால், உத்தியோகப்பூர்வ இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது கடினமாக உள்ளது.
சேற்றில் இருந்து மீட்கப்படும் உடல்கள், பல நாட்கள் நீருக்கடியில் இருந்ததால் மிகவும் சிதைந்து, அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அடையாளம் காணப்படாத அல்லது உறவினர்களால் உரிமை கோரப்படாத அனைத்து உடல்களிலிருந்தும் டி.என்.ஏ மாதிரிகளை எடுக்குமாறு நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.
அவர்களுக்கு கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகள் செய்யப்படும்; எதிர்காலத்தில் அவர்களை அடையாளம் காணும் வாய்ப்பை உருவாக்கும் வகையில், அவர்களின் உடல்களின் புகைப்படங்களும் டிஎன்ஏ (DNA) மாதிரிகளும் சேகரிக்கப்படும் என்றார்.
திரிபுவன் பல்கலைக்கழகப் போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் ஏற்கனவே சுமார் 60 சடலங்கள் உள்ளன. ஆனால், எங்களுக்கு வந்துகொண்டிருக்கும் சடலங்களின் எண்ணிக்கையை எங்களால் இனியும் சமாளிக்க முடியாது என்றே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
![]()