இலங்கை

அநுர அரசின் மக்கள் செல்வாக்கில் கடும் வீழ்ச்சி!; திஸ்ஸ அத்தநாயக்க பகிரங்க எச்சரிக்கை

இரு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயிலும் மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மக்கள் செல்வாக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசின் மீதான மக்களின் செல்வாக்கு

“ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், ஊழலற்ற நிர்வாகம், முறைமை மாற்றம் மற்றும் எரிபொருள், மின்சாரக் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட எந்தவொரு வாக்குறுதியையும் அரசால் நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.

அநுர அரசின் மக்கள் செல்வாக்கில் கடும் வீழ்ச்சி! திஸ்ஸ அத்தநாயக்க பகிரங்க எச்சரிக்கை | Decline Public Influence Tissa Attanayake Warns

 

சமீபத்திய ‘வெரிடே ரிசர்ச்’ ஆய்வறிக்கையின்படி, அரசின் மீதான மக்களின் செல்வாக்கு 65 சதவீதத்திலிருந்து 50 சதவீதத்துக்கும் கீழ் சரிந்துள்ளதுடன், பொருளாதாரத்தைக் கையாள்வது குறித்த நம்பிக்கை 40 சதவீதத்துக்கும் கீழே வீழ்ச்சியடைந்துள்ளது.

நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவுபடுத்தவே 22ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படுகின்றது என்று அரசு கூறுவது அப்பட்டமான பொய்.

நாட்டின் நிலுவையிலுள்ள வழக்குகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவை நீதிவான் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களிலேயே உள்ளனவே தவிர உயர் நீதிமன்றத்திலோ அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றத்திலோ அல்ல. தன் விருப்பத்துக்கு ஏற்ப இயங்கும் ஒரு நீதித்துறை அமைப்பை உருவாக்கவே அரசு முயல்கின்றது.

உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்

இதற்கு எதிராக வரலாற்றிலேயே இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையிலான மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயன்ற எந்தவொரு அரசும் நீதிமன்றத்திடமிருந்து தக்க பதிலடியையே பெற்றுள்ளன என்ற வரலாற்றை இந்த அரசு நினைவில்கொள்ள வேண்டும்.

அநுர அரசின் மக்கள் செல்வாக்கில் கடும் வீழ்ச்சி! திஸ்ஸ அத்தநாயக்க பகிரங்க எச்சரிக்கை | Decline Public Influence Tissa Attanayake Warns

மக்களின் உண்மையான பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிய அரசு, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

22ஆவது திருத்தம் குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் ஓடிய நீதி அமைச்சர், “எங்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. அரசுடன் விளையாட வேண்டாம்” என கூறி தனது அதிகார ஆணவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகார மமதையில் இந்தத் திருத்தத்தைப் பலவந்தமாக நிறைவேற்ற முயன்றாலும் இறுதியில் மக்கள் முன்னிலையில் அரசால் தலைநிமிர்ந்து நிற்க முடியாது.” – என்றும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button