உலகம்

ஜிம்பாப்வேயில் 27 பேரின் உயிரை பலியெடுத்த கோர விபத்து

ஜிம்பாப்வேயில், தேவாலயத்திற்குச் செல்பவர்களை ஏற்றிச் சென்ற மினிபஸ் ஒன்று லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து, நேற்று காலை ஜிம்பாப்வே நேரப்படி 18.30 GMT -இல் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு வாகனத்திலும் ஏராளமான பயணிகள் பயணித்த நிலையில், 07 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட அந்த சரக்கு லாரி, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, பேருந்தின் மீது மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button