உலகம்

இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, தோளில் சுமந்து செலுத்தக்கூடிய ‘ஜாவெலின்’ (Javelin) வகை கவச எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா வாங்கத் திட்டமிட்டுள்ளதாக, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர்  அறிவித்தார்.

இது டெல்லிக்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுவடைவதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

இதனை ஒரு முக்கியமான செய்தி என்று குறிப்பிட்ட அமெரிக்கத் தூதுவர், இது ஜாவெலின் ஏவுகணைகளை இணைந்து தயாரிப்பதற்கான வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தினார்.

அவசரகாலக் கொள்முதல் அடிப்படையில் ‘ஜாவெலின்’ ஏவுகணைகளை வாங்குவதற்கான 45.7

மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் இந்திய இராணுவம் கையெழுத்திட்டுள்ளது.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான 10 ஆண்டுகாலக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அவரது அமெரிக்க இணையான பீட் ஹெக்செத் ஆகியோர் கையெழுத்திட்ட சில மாதங்களுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button