உலகம்

‘ஐரோப்பாவில் நடந்த கொடூர இனப்படுகொலை’- போர்க்குற்றவாளி Ratko Mladic ஐ.நா.சிறையில் காலமானார்

போஸ்னியப் போரின் (1992-1995)போது இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக வாழ்நாள் சிறைத்தண்டனையை எதிர்நோக்கிவந்த போஸ்னிய செர்பிய முன்னாள் படைத்தளபதி ரட்கோ ம்லாடிச் (Ratko Mladic) தனது 84வது வயதில் காலமானார்.

நெதர்லாந்தின் Hague நகரிலுள்ள ஐ.நா சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

ஸ்ரெப்ரெனிக்கா இனப்படுகொலை

1995- ஆம் ஆண்டு ஐ.நா-வால் ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என அறிவிக்கப்பட்ட ஸ்ரெப்ரெனிக்காவில் 8,000-க்கும் மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்கள் மற்றும் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இவரே பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான கொடூரமாக இது கருதப்படுகிறது.

நீதிமன்றத் தீர்ப்பு

மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கொடூரமான குற்றங்களைச் செய்ததற்காக 2017-ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்தது. அப்போதைய ஐ.நா மனித உரிமைகள் தலைவர் செயித் ராத் அல் ஹுசைன் இவரை “தீமையின் உருவம்” எனக் குறிப்பிட்டார்.

1,00,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட போஸ்னியப் போரில், தலைநகர் சரஜேவோவை (Sarajevo) பீரங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்களால் தினமும் தாக்கி 10,000 பேரைக் கொன்றொழித்தார்.

போஸ்னிய நிலப்பரப்புகளில் இருந்து முஸ்லிம்கள் மற்றும் குரோஷியர்களை வெளியேற்றி ‘ஒருங்கிணைந்த செர்பியாவை’ (Greater Serbia) உருவாக்குவதே இவரது இலக்காக இருந்தது.

இறுதிவரை அடங்காத முனைப்பு

வழக்கு விசாரணைகளின் போது “நான் இந்த நீதிமன்றத்தை அங்கீகரிக்கவில்லை” என்று கூறிய Ratko Mladic, 2017-இல் தனக்கு வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டபோது “இவையெல்லாம் பொய்கள், நீங்கள் அனைவரும் பொய் சொல்கிறீர்கள்!” என்று கூச்சலிட்டுத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button