இலங்கை

புலிகளின் தலைவருக்கு ஈமக்கிரியையும் சிலையும்!; சில தரப்புகள் முயல்கின்றன என்கிறார் டக்ளஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் என்பதற்காகவும், அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்பதையும் முன்வைத்து, ஒரு தேர்தல் கோஷமாக முன்வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,இப்போது அண்மையில் ஒரு வதந்தி ஒன்று வந்தது. அதாவது வதந்தி என்று சொல்வதை விட, சரத் பொன்சேகா உண்மையைச் சொல்லியிருக்கலாம். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உண்மையைச் சொல்லியிருக்கலாம். அதாவது பிரபாகரன் கொல்லப்பட்டதும், பிரபாகரனை புதைத்ததும் பற்றி அவர் சொல்லியிருக்கிறார்.

இப்போது தேர்தல் ஒன்று வரவிருக்கிறது அல்லது ஒரு தேர்தல் வரலாம் என்ற சூழ்நிலையில் தமிழ் தரப்பினர் இந்த வாக்குளைக் கவர்வதற்காக உசுப்பேத்துகிற அரசியல் செய்த ஆட்கள், இதை இப்போது முன்னெடுக்கப் போவதாக செய்திகள் வந்திருக்கிறது.

அதாவது பிரபாகரன் இறந்துவிட்டாரா இல்லையா, கொல்லப்பட்டுவிட்டாரா அல்லது உயிரோடு இருக்கிறாரா என்ற வதந்தியை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த நிலையில்தான் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சொல்லியிருக்கிறார், “பிரபாகரன் இங்கேதான் புதைக்கப்பட்டார்” என்று. அப்படியானால் அந்த இடத்தை அடையாளம் காட்டி, அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இரண்டாவது, அவர் தங்களுடைய தலைவர்,அதனால் அவருக்கு ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் என்றும், அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்பதையும் முன்வைத்து, தேர்தல் கோஷம் ஒன்றை முன்வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button