90 நாள் காவல் நீடிப்புக்காக சலேக்கு எதிராக கூறப்பட்ட பொய்!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் தடுப்புக்காவல் உத்தரவை நீடிக்கும் நோக்கில் விசாரணையாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் பொய்யான தகவல்களை சமர்ப்பித்துள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த இயக்கத்தின் உறுப்பினரான சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரமவே இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஷானி அபேசேகர பிரான்ஸ் சென்று அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்து நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இருப்பினும், அவர் இலங்கை தூதரகத்திற்குச் செல்லவில்லை. அப்போது பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் எவரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, தூதுவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இல்லத்திலேயே அந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலவும் சட்டத்தின்படி, தனிப்பட்ட முறையில் சென்று தூதுவரின் இல்லத்தில் வாக்குமூலம் பதிவுசெய்து அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா?. இது சட்டத்திற்குப் புறம்பான மற்றும் சுரேஷ் சலேவின் தடுப்புக் காவலை நீடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான செயலாகும் என தெரிவித்துள்ளார்.
![]()