பலதும் பத்தும்

06 ஆண்டுகளுக்கு பின் பிரிட்டன் திரும்பிய ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர்

ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் இன்று மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளதாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

06 ஆண்டுகளுக்கு முன் அரசு குடும்ப அந்தஸ்த்தை துறந்த இந்த தம்பதியினர் அமெரிக்காவிற்கு குடிப்பெயர்த்திருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் தங்களின் குடும்பத்துடன் மீளவும் பிரித்தானியா திரும்பவுள்ளதாகவும், அங்கு சாதாரண வாழ்க்கையை வாழவுள்ளதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதற்கமைய இன்றைய தினம் அவர்கள் மீளவும் பிரித்தானியா திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களுடைய குழந்தைகளான, 7 வயதான இளவரசர் ஆர்ச்சி மற்றும் 5 வயதான இளவரசி லில்லிபெட், செப்டம்பர் மாதம் பிரித்தானியாவில் உள்ள பாடசாலையில் கல்வி நடவடிக்கையை தொடங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அவர்கள் எங்கு தங்குவார்கள் அல்லது குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிப்பார்கள் என்பது குறித்த துல்லியமான விவரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், அவர்கள் அரச இல்லத்தில் வசிக்கவோ அல்லது அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்யவோ மாட்டார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button