கோட்டாபயவை கதிகலங்க வைத்த பிரதம நீதியரசருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

நாட்டின் பிரதம நீதியரசர்கள் மற்றும் ஏனைய நீதிபதிகளின் ஓய்வு வயதினை அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறான நிலைப்பாடு உள்ளது என்பது தொடர்பில் எமக்கு பல்வேறு கேள்விகள் எழ தான் செய்கின்றன.
இருப்பினும், பொதுவாகவே, இலங்கை நீதித்துறை மீது தமிழ் மக்களிடையே அதிருப்தி தான் உள்ளது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. பயணவழிகாட்டிகளைப் படி
இது ஒரு புறம் இருக்க, அரசியலமைப்பின் 22வது சட்டமூல திருத்தம், சில நேர்மையான அதிகாரிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பினை வழங்கிய இலங்கையின் 49வது பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேனவுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
![]()