உலகம்

ஈரான் ஹேக்கர்கள் தாக்குதல் – பிரித்தானியாவின் மின் உற்பத்தி நிலையம் முடக்கம்

ஈரானுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் நடத்திய இணையவழித் தாக்குதலைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் ஒரு சிறிய அளவிலான மின் உற்பத்தி நிலையம் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஜுலை மாதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானிய இணையவழித் தாக்குதல் ஒன்று இங்கிலாந்தின் ஒரு மின் உற்பத்தி நிலையத்தை வெற்றிகரமாக முடக்கிய முதல் நிகழ்வு இது என்று நம்பப்படுகிறது.

தேசிய இணையப் பாதுகாப்பு மையத்திற்கு (NCSC) இது குறித்துத் தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த மீறலால் பரந்த மின் கட்டமைப்புக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button