பலதும் பத்தும்

விண்வெளியில் மனிதர்கள் குழந்தை பெற முடியுமா?-மனித இனத்துக்கு ஆபத்தா?

விண்வெளியில் மனிதர்கள் நிரந்தரமாகக் குடியேறி, அங்கு எதிர்கால தலைமுறைகளை உருவாக்குவது எதிர்பார்த்ததை விட மிகவும் சவாலானதாக இருக்கும் என புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

விண்வெளியில் நிலவும் மிகக் குறைந்த ஈர்ப்புவிசை (Microgravity) மற்றும் அதிக அளவிலான கதிர்வீச்சு காரணமாக, மனித இனப்பெருக்கத்திற்குத் தேவையான விந்தணு மற்றும் கருமுட்டை உருவாக்கும் செல்களின் செயல்திறன் 50 சதவீதம் வரை குறையக்கூடும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், உடலின் செல்கள் பெருகும் வேகம் 25 சதவீதம் வரை மந்தமடையக்கூடும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, கர்ப்பம், கருவின் வளர்ச்சி மற்றும் மனித இனப்பெருக்கம் தொடர்பான பல்வேறு முக்கியமான உயிரியல் செயல்முறைகள் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்திரன் மற்றும் செவ்வாய் போன்ற விண்வெளிப் பகுதிகளில் எதிர்காலத்தில் மனிதக் குடியிருப்புகளை அமைக்கும் திட்டங்கள் குறித்து உலக நாடுகள் தீவிரமாக ஆராய்ந்து வரும் நிலையில், மனித இனத்தின் எதிர்கால தலைமுறைகள் விண்வெளியில் எவ்வாறு உருவாகும் என்பது மிகப்பெரிய அறிவியல் சவாலாக உருவெடுத்துள்ளது.

விண்வெளியில் மனிதர்கள் வாழ்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவது மட்டுமன்றி, அங்கு மனித இனத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கான உயிரியல் சவால்களையும் தீர்க்க வேண்டியிருக்கும் என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button