76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜயின் ஓவியம்

இந்திய சுதந்திர தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓவியப் பயிற்சி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜயின் 76 அடி உயர விழிப்புணர்வு ஓவியத்தை 05 மணி நேரத்தில் வரைந்துள்ளனர்.உள்ளாட்சி அரசு சேவைகளைப் பெறுதல்
அரச பாடசாலைகளில் ஏனைய பாடங்களை போல் ஓவியப் பாடமும் இருந்து வந்தது. 2 பிரிவுகளில் நடைபெற்ற இந்த பாடத்திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளில் நிறுத்தப்பட்டது. ஒவியக்கலை அனைத்து கலைகளுக்கும் முன்னோடி கலையாகும்.
எனவே, இதை தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, பாடசாலைகளில் ஓவிய ஆசிரியர் நியமித்து ஓவியம் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், அழிந்துவரும் ஓவியக் கலையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மாமூட்டுகடை ஆர்.பி.ஏ பாடசாலை மைதானத்தில் தமிழ் நாட்டு முதலமைச்சர் விஜய்யின் அலுவலக மாதிரி பட ஓவியம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள ஓவிய பயிற்சி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 76 அடி உயரம் 60 அடி அகலத்தில் ஓவியம் வரைந்து ஓவிய கலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 139 ஓவிய மாணவ, மாணவிகள் மற்றும் 10 ஆசிரியர்கள் சேர்ந்து ஐந்து மணி நேரத்தில் இந்த ஓவியத்தை வரைந்துள்ளனர். தத்ரூபமாக அமைந்த நிலையில் ஏராளமானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
![]()