இலங்கை

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்: சவாலுக்கு உட்படுத்தி இதுவரை 10 மனுக்கள்

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவின் ஒரு பகுதியாக, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி புதன்கிழமை (19) மாலையாகும் போது சுமார் 10 விஷேட மனுக்கள் வியாக்கியாணம் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 22வது திருத்தம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றுக்கு எதிரான மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான 14 நாள் காலக்கெடு  (18) தொடங்கிய நிலையிலேயே, இம்மனுக்கள் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளன.

உத்தேச சட்ட மூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, இலங்கை சட்டத்தரனிகள் சங்கம் 22வது திருத்தத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. குறித்த சங்கத்தின் பொருளாளர் டி.எம்.எஸ். பசிந்து சில்வா மற்றும் உதவி செயலாலர் ஆகியோர் இணைந்து இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.இலங்கை பொருளாதாரம்

இதனைவிட ப்ரீ லோயர்ஸ் அமைப்பின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான‌ மைத்திரி குணரத்ன, சர்வ ஜன பலய, சமகி ஜன பலவேகய,முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் சாந்த ஜயதிலக ஆகியோரும் நேற்று முன் தினம் மாலையாகும் போது மனு தாக்கல் செய்த தரப்பில் அடங்குவர்.

பின்னர் புதன்கிழமை (19) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, பாக்கியசோதி சரவணமுத்து, துமிந்த நாகமுவ, மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரும் விஷேட மனுக்கலை தாக்கல்ச் செய்துள்ளனர்.

இந்த மனுக்களில் அரசியலமைப்பின் 134 (1) ஆம் உறுப்புரை பிரகாரம் சட்டமா அதிபர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.

முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அதனை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாகவும் மட்டுமே இயற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் வியாக்கியாணம் அளிக்க வேண்டும் என மனுதாரர்கள் கோருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button