உலகம்

தேனிலவு சென்ற பிரிட்டிஷ் தம்பதி உலங்கு வானூர்தி விபத்தில் பலி

தேனிலவு சென்ற இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது.

கிறீஸ் சிஃப்னோஸ் தீவில் நேற்றுத் திங்கள்கிழமை நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், புதுமணத் தம்பதிகளான அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபர்ட் ஆகியோர் தங்களது தேனிலவுக்காக கிரீஸில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தேனிலவுக்காக கிரீஸில் இருந்ததாக அடையாளம்

தனியார் உலங்கு வானூர்தி தரையிறங்கும் தளத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த இருவரும் மற்றும் அவர்களது கிரேக்க நாட்டவரான விமானியும் உயிரிழந்தனர்.

அந்தத் தம்பதியினர், ஏதென்ஸுக்கு அருகிலுள்ள மார்கோபோலோ கிராமத்திலிருந்து பிரபலமான விடுமுறைத் தீவுக்கு ஹெலிகாப்டரில் சென்றதாகக் கூறப்படுகிறது.

கிரீஸின் விமானப் பாதுகாப்பு ஆணையம், இந்த விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும், அதன் புலனாய்வாளர்கள் ஆதாரங்களைச் சேகரிக்கவும் சாட்சிகளிடம் பேசவும் செவ்வாயன்று சம்பவ இடத்திற்குச் செல்லவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன

Loading

One Comment

  1. முக்கியமானவர்களுக்கு விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்களை,இயல்பானது என்று விலகிச் செல்ல முடியாது. அவை சதியாக்க்கூட இருக்கலாம்

    இப்போதைக்கு தவிர்க்க முடியாத விபத்து என இவ்விபத்து சம்பந்தப்பட்ட அனைத்துக்குமான பதிலை விசாரிப்பவர்கள் முடிவைச் சொன்னாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பம் இவ்விபத்தை மீண்டும் ஆய்வு செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *