உலகம்

பாகிஸ்தானில் இருந்து 10,000 பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு உள்ளனர்!

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒரு கூட்டத்தின் மேடை பிரசாரத்தின்போது மதகுரு நசீர் மத்னி தெரிவிக்கையில்,

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு 10,000 பயங்கரவாதிகளை லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

மதகுரு மத்னியின் கருத்துக்கள், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் பங்கு குறித்தும், அதன் தலைவர் குறித்தும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய ஹபீஸ் சயீத், பாகிஸ்தானை் தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஆவார். இந்த அமைப்பு இந்தியாவிற்கு எதிராக கடந்த ஆண்டுகளில் மிகவும் கொடூரமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிற்கு அல்-கொய்தா மற்றும் தலிபான்களுடன் தொடர்பு இருந்ததன் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபை 2005 இல் அந்த அமைப்பிற்கு தடை விதித்தது. பின்னர், 2008 இல் அமெரிக்கா ஹபீஸ் சயீதை உலகளாவிய பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் உட்பட, இந்தியாவின் முக்கிய பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளிலும் ஹபீஸ் சயீத்-இன் பெயர் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக ஜூலை மாதம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பாக சயீதுக்கு எதிராக ஜம்மு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்தது.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆறு பாகிஸ்தானிய குற்றவாளிகளுக்கு எதிராக மும்பை காவல்துறை சட்டமுறைப்படி விசாரணையை தொடங்கியது.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி இரவு, 10 பயங்கரவாதிகள் கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்து தாஜ் ஓட்டல், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல்களை நடத்தினர். அடுத்த நான்கு நாட்களில், அவர்கள் நகரம் முழுவதும் நடத்திய தாக்குதல்களில், 166 பொதுமக்கள் கொல்லப்பட்டு, சுமார் 300 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மும்பையின் மிகவும் பரபரப்பான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடந்த இந்த தாக்குதல், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து 2025 ஏப்ரல் மாதத்தில் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கிலும் பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சையதின் பெயர் அடிபட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button