பலதும் பத்தும்

நரம்பில் ஏறிய பாம்பின் விஷம்: தம்பியை காப்பாற்ற அண்ணனின் பாசப்போராட்டம்

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் தம்பியை காப்பாற்ற அண்ணன் போராடிய செயல் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஹார்டோய் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்(வயது 21), சமீபத்தில் வயலில் வைக்கோல் கட்டுகளை எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக பாம்பு தீண்டியுள்ளது.

இதனால் அவருக்கு விஷம் வேகமாக பரவியதால் மயக்கம் அடையத் தொடங்கினார், இதனை கவனித்த அவரது அண்ணன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஷம் நரம்பு மண்டலத்தை பாதித்துள்ளதால் சுயநினைவை இழக்கக்கூடும் என எச்சரித்துள்ளனர், மேலும் தூங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனால் பதறிப்போன அண்ணன் ஒரு மணிநேரத்துக்கு மேலாக தம்பியை தூங்கவிடாமல் பார்த்துக்கொண்டார், அவர் கண்ணை மூடும்போதெல்லாம் கன்னத்தில் அறைந்து எழுப்பிக்கொண்டே இருந்தார்.

அந்நேரத்தில் மருத்துவரின் தீவிர சிகிச்சையால் அருண் உயிர்பிழைத்தார், தம்பியை காப்பாற்ற அண்ணன் சுமார் 150 முறை அவர் கன்னத்தில் அறைந்தார், அவரது பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களை நெகிழவைத்தது.

நரம்பில் ஏறிய பாம்பின் விஷம்: தம்பியை காப்பாற்ற அண்ணனின் பாசப்போராட்டம் | Brothers 150 Slaps Save Sibling Snake Bite

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button