இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணைக் குழு ஹிஸ்புல்லாவிடம் தீவிர விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காகச் சென்றிருந்தார்.அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றுள்ளது.

வாக்குமூலம் வழங்கிவிட்டு வெளியேறிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், 2013-2014 காலப்பகுதியில் தமது தனிப்பட்ட வங்கிச் கணக்கு மற்றும் பணியாளர் ஒருவரின் வங்கிச் கணக்கிற்கு வைப்பு செய்யப்பட்ட தொகைகள், அதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்துக் கேட்டறிவதற்கே இந்த விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், இந்த விசாரணை அரசாங்கம் சார்ந்த விவகாரம் அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

இது குறித்துப் பரப்பப்பட்டு வரும் வதந்திகளுக்கு மறுப்புத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா, இதில் அரசாங்கம் சார்ந்தோ அல்லது வேறு எந்தவொரு பாரிய தனிப்பட்ட சிக்கல்களோ இல்லை என்றும் குறிப்பிட்டார். குறித்த விசாரணை முற்றிலும் வழக்கமானதொரு விசாரணை நடைமுறையேத் தவிர, இதில் வேறு எந்தவிதமான சட்டப் பிரச்சினைகளோ அல்லது சிக்கல்களோ இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button