இலங்கை

புதிய புதைகுழியை எங்கிருந்து தோண்டுவது?; இன்று தீர்மானிக்கப்படும்

செம்மணி மனித புதைகுழியில் மேலும் சில எழுமாற்றான குழிகளை தோண்டுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை நேற்று எடுக்கப்பட்டதுடன் எப்பகுதியில் அதனை தோண்டுவது என்ற முடிவு இன்றையதினம் எட்டப்படவுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே பரீட்சார்த்தமாக தோண்டப்பட்ட குழி இரண்டிலிருந்து பின்னால் உள்ள மதில் வரையுமான நீளமும் அகலமும் நேற்று அளந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய தினம் அதை அடிப்படையாக வைத்து எங்கு எங்கு பரிசோதனைக்குரிய குழிகளை மேலதிகமாக வெட்டலாம் என்று தீர்மானம் எடுக்கப்படும் – என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button