உலகம்

பெலாரஸ் எல்லையில் சுரங்கப்பாதை கண்டுப்பிடிப்பு – சட்டவிரோத குடியேறிகள் குறித்து அச்சம்

பெலாரஸுடனான எல்லைக்குக் கீழே ஒரு சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதாக லாட்வியா இன்று தெரிவித்துள்ளது.

குறித்த சுரங்கப்பாதையின் ஊடாக சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஐரோப்பிய நாடுகளுக்கு நுழையக் கூடும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படும் வலையமைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டங்களையும் அந்நாடு அறிவித்துள்ளது.

இதற்கமைய எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த அந்நாடு உறுதிப்பூண்டுள்ளதுடன், “எல்லைக் காவல்படை, மாநிலக் காவல்துறை, தேசிய ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பை பேண நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை முன்கூட்டியே கண்டறிந்து கைது செய்வதற்காக ட்ரோன்களை அதிக அளவில் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் செவுட்டா எனும் தனித்த பகுதிக்கு பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வருகை தந்துள்ள நிலையில், குடியேற்றம் குறித்து ஐரோப்பிய நாடுகள் கவலைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button