உலகம்

வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப் பிரித்தானியப் பிரதமருக்கு அழுத்தம்!

பிரித்தானியாவின் வடகடலில் உள்ள ஜாக்டா (Jackdaw) மற்றும் ரோஸ்பேங்க் (Rosebank) ஆகிய பகுதிகளில் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வுத் திட்டங்களை அனுமதிப்பது தொடர்பில், பிரித்தானியப் பிரதமர் ‘அன்டி பே(ர்)னாம்’ (Andy Burnham) கடும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனச் சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இருப்பினும், வேலை வாய்ப்புகளைப் பாதுகாக்கவும் எரிசக்திச் செலவுகளைக் குறைக்கவும் அனுமதி வழங்கப்பட வேண்டும் எனத் தொழிற்துறை அமைப்புகளும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்திட்டங்களுக்கான கலந்தாய்வு நடவடிக்கைகள் நிறைவடையும் நிலையில், தனது சொந்தக் கட்சியின் வாக்குறுதிகள் மற்றும் காலநிலை இலக்குகளைக் கருத்தில் கொண்டு பிரதமர் Burnham விரைவில் தனது இறுதித் தீர்மானத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button