அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதற்கமைய, சமீப காலத்தில் ரூபாய் வீழ்ச்சியடையும் வேகம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் அமெரிக்க டொலரின் விற்பனை மதிப்பு நேற்று 340 ரூபாய் என்ற குறியீட்டிற்கு கீழே சரிந்துள்ளது.
இது சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட பணவியல், நிதி முன்னெச்சரிக்கை கொள்கை நடவடிக்கைகளுக்கு பின்னர் மாற்றம் ஏற்பட்டுள்ளதென இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி
இந்த வருடத்தின் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா் 7.8 சதவீதம் மதிப்பு இழந்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமையினால் வெளித்துறையில் தொடரும் அழுத்தம் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் தினசரி நாண மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் நேற்று முறையே 330.88 மற்றும் 339.94 ரூபாயாக காணப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை இதன் மதிப்புகள் 331.01 மற்றும் 340.15 ரூபாயாக பதிவு செய்யப்பட்டன.
இதனால், டொலரின் விற்பனை விலை நேற்று, ஜுலை 08ஆம் திகதிக்கு பின்னர் முதல் முறையாக 340 ரூபாய் என்ற நிலைக்குக் கீழே சரிந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()