உலகம்

இடைக்கால பிரதமர் மீது பெண் முட்டை வீச்சு; கொசோவோ பாராளுமன்றத்தில் சலசலப்பு

தென்கிழக்கு ஐரோப்பா நாடான கொசோவோ பாராளுமன்றக் கூட்டத்தொடரின்போது, இடைக்கால பிரதமர் அல்பின் குர்தி மீது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முட்டைகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் கொசோவோ பாராளுமன்றம் கூடிய நிலையில், ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு மேலதிக கால அவகாசம் தேவை என இடைக்கால பிரதமர் அல்பின் குர்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் அரசாங்கம் கலந்துரையாட வேண்டும் என அவர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து சபையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, கூட்டணிக் கட்சியொன்றின் நாடாளுமன்ற உறுப்பினரான டைம் காத்ரிஜாஜ், தனது கையில் வைத்திருந்த முட்டைகளை இடைக்கால பிரதமர் மீது வீசியுள்ளார்.

அத்துடன், பிரதமரை நோக்கி எதிர்க்கட்சி பெண் உறுப்பினரொருவர் “அவமானம், அவமானம்” எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக தலையிட்டு குறித்த பெண் உறுப்பினரை அங்கிருந்து வெளியேற்றினர்.

இந்த எதிர்பாராத சம்பவத்தால் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

சபாநாயகர் பதவிக்கான வேட்பாளரை முன்மொழிவதற்கு முன்னதாக எதிர்க்கட்சிகளுடன் மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு கால அவகாசம் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினரின் முட்டை வீச்சு சம்பவம் கொசோவோ பாராளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button