பலதும் பத்தும்

உலகில் இந்த நகரில் இறப்பதற்கு தடையாம்: எங்குள்ளது? என்ன காரணம் தெரியுமா?

இறப்பு என்பது ஒரு உயிரினத்தின் உடல் இயக்கங்கள் மற்றும் உயிர் வாழும் தன்மைகள் நிரந்தரமாக நின்றுபோகும் இயற்கையான நிலையாகும்.

இது உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் தவிர்க்க முடியாத ஒரு முடிவாகும்.

ஆனால், நார்வேயில் உள்ள லாங்கியர்பியன் நகரில் இறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒருவர் இறந்தால், அது விதிமீறலாகக் கருதப்படுகிறது.

நார்வேயின் லாங்கியர்பியன் நகரில் கடைசியாக 1917ஆம் ஆண்டு ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உலகில் இந்த நகரில் இறப்பதற்கு தடையாம்: எங்குள்ளது? என்ன காரணம் தெரியுமா? | The City Where Dying Is Banned In Tami

வட துருவத்திற்கு அருகில் உள்ள இந்த நகரில் ஆண்டு முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது. மேலும், கோடை காலத்தில் சுமார் 76 நாட்கள் சூரியன் மறைவதில்லை.

கடும் குளிர் காரணமாக, இங்கு புதைக்கப்படும் மனித உடல்கள் இயற்கையாக சிதைவதில்லை.

இதனால், பல ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட உடல்களும் அப்படியே இருப்பது கண்டறியப்பட்டது.

உலகில் இந்த நகரில் இறப்பதற்கு தடையாம்: எங்குள்ளது? என்ன காரணம் தெரியுமா? | The City Where Dying Is Banned In Tami

இதன் காரணமாக நோய் பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூவால் உயிரிழந்தவர்களின் உடல்களில், பல ஆண்டுகளுக்குப் பிறகும் வைரஸ் தடயங்கள் இருந்ததாக ஆய்வுகள் தெரிவித்தன.

இதையடுத்து, 1950களில் லாங்கியர்பியனில் உடல்களை புதைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

உலகில் இந்த நகரில் இறப்பதற்கு தடையாம்: எங்குள்ளது? என்ன காரணம் தெரியுமா? | The City Where Dying Is Banned In Tami

இந்த விதிமுறையின்படி, லாங்கியர்பியனில் வசிக்கும் ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது வயது முதிர்ந்தாலோ, நார்வேயின் பிரதான நிலப்பகுதிக்கு அனுப்பப்படுவார்.

அங்கு சிகிச்சை அல்லது தேவையானால் இறுதிச் சடங்குகளும் நடத்தப்படும்.

மேலும், இங்கு மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களும் பிரசவத்திற்கு முன்பே நார்வேயின் பிரதான நிலப்பகுதிக்கு அனுப்பப்படுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button