உலகம்

போர் அச்சுறுத்தல் – தைவானில் வான்வழித் தாக்குதல் ஒத்திகை

தைவான் வான்வழித் தாக்குதல் ஒத்திகையை நடத்தியுள்ளது.

பொதுமக்களின் அவசரகால நடவடிக்கைகளைச் சோதிக்கும் விதமாக, இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாகவும், இதன்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டு குடியிருப்பாளர்கள் வழிநடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவான், காவோசியுங்கில் (Kaohsiung) அபாய ஒலி எழுப்பட்டு நடத்தப்பட்ட இந்த ஒத்திகை சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஒத்திகையை தொடர்ந்து அவசரக்கால சூழ்நிலையில் பொதுமக்கள் நடந்துக்கொள்ள வேண்டிய விதம் தொடர்பில் அறிவுறுத்தல் வழக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், தைவான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button