உலகம்

கடந்த 18 மாதங்களில் இனவெறிச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவைப் பணியாளர்கள் தெரிவிப்பு!

கடந்த 18 மாதங்களில் இனவெறிச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சில நோயாளிகள் வெள்ளையர் அல்லாத பணியாளர்களிடம் சிகிச்சை பெற மறுத்த நிலையில், மற்றவர்கள் அவர்களை இழிவான சொற்களால் அழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிரியக்கவியலாளர்கள் சங்கத்தின் ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, சில நோயாளிகள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஊழியர்களை ‘அழுக்கு வெளிநாட்டினர்’ என்று அழைத்துள்ளனர்.

இந்நிலையில், சில ஊழியர்கள் இனவெறிக் கருத்துக்களை வேலையின் ஒரு பகுதியாகப் பொறுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

கதிரியக்கவியலாளர்கள் சங்கம், இனவெறிச் சம்பவங்கள் அனைத்தையும் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்றும், அவை கையாளப்பட்ட விதத்தையும் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேசிய சுகாதார சேவையின் இங்கிலாந்தின் தலைமை மனிதவள அதிகாரியான தாமஸ் சைமன்ஸ், இதுபோன்ற நடத்தைக்கு சுகாதார அமைப்பில் இடமில்லை என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button