மீன்களிடையே நேரடியாகப் பரவும் புற்றுநோய் – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

அமெரிக்கா மற்றும் கனடா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஏரி ஒன்றில் வாழும் காட்டுக் கெளுத்தி மீன்களுக்கிடையே, ஒரு மீனிலிருந்து மற்றொரு மீனுக்கு நேரடியாகப் புற்றுநோய் பரவுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உலகிலேயே மீன் வகைகளில் இவ்வாறு புற்றுநோய் செல்கள் நேரடியாகப் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.
வழக்கமாக உயிரினங்களின் உடலுக்குள் ஏற்படும் பிறழ்வுகளால் மட்டுமே புற்றுநோய் உருவாகும். ஆனால், இந்த ஏரி கெளுத்தி மீன்களில் ஒரு மீனின் உடலிலிருக்கும் புற்றுநோய் செல்கள், மற்றொரு மீனின் உடலுக்கு நேரடியாகப் பரவி நோயை உண்டாக்குவது ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த மீன்களை மனிதர்கள் சமைத்து உண்பதால் அவர்களுக்குப் புற்றுநோய் பரவுமா என்ற அச்சம் எழுந்த நிலையில், “இந்த மீன்களை உண்பதால் மனிதர்களுக்குப் புற்றுநோய் பரவுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
இயற்கையிலேயே தொற்றும் தன்மையுடைய புற்றுநோய்கள் மிகவும் அரிதானவை என்பதால், இந்தத் தனித்துவமான பரவல் முறை குறித்து விஞ்ஞானிகள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
![]()