உலகம்

தாயகம் திரும்புவேன்; பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சூளுரை

மாணவர் தலைமையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா தான் மீண்டும் தாயகம் திரும்புவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கைது, சிறைத்தண்டனை அல்லது மரணத்தைச் சந்திக்க நேரிட்டாலும், தனது ஆதரவாளர்களை விட்டுத் விலகி இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் உள்ள தெற்காசிய வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கூட்டமைப்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில், தொலைபேசி (ஆடியோ) வாயிலாகச் செய்தியாளர்களிடம் பேசிய 78 வயதான ஹசீனா,

“நான் கைது செய்யப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம் என்பதை அறிவேன். ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை அவர்கள் நடைமுறைப்படுத்த முயலலாம். ஆனால், மக்களுக்கான எனது கடமையை பயம் தீர்மானிக்க முடியாது” எனக் குறிப்பிட்டார்.

அரசியல் எதிரிகள் மீதான கொலைகள், கைதுகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் முறைகேடான தேர்தல்கள் இடம்பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்து இரண்டாவது ஆண்டு நிறைவடையும் நாளிலேயே இந்நிகழ்வு நடைபெற்றது.

கடந்த நவம்பர் மாதம், வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் – ஹசீனாவால் அவரது அரசியல் எதிரிகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிமன்றம் – 2024 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது 1,400-க்கும் மேற்பட்டோரைக் கொல்ல உத்தரவிட்ட குற்றத்திற்காக, அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி அவருக்கு மரண தண்டனை விதித்தது.

ஹசீனாவைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேசம் பலமுறை இந்தியாவைக் கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும், ஹசீனாவின் நெருங்கிய கூட்டாளியான புதுடெல்லி, கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button