பலதும் பத்தும்

குதிகால் வலி வருகிறதா? இந்த வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்

உடலில் வேறு எந்த வலியும் இல்லாமல், சிலருக்கு குதிகாலில் மட்டும் வலி இருக்கும்.

குறிப்பாக காலையில் எழுந்ததும் தரையில் கால் வைக்கும் போது வலி அதிகமாக உணரப்படும்.

குதிகால் வலி பிரச்சனைக்கு பிளாண்டர் ஃபாசியிடிஸ் (Plantar Fasciitis) என்று பெயர்.

குதிகாலை கால்விரல்களுடன் இணைக்கும் திசுவில் அழற்சி அல்லது சிறிதாக கிழிவு ஏற்பட்டால் இந்த வலி ஏற்படும்.

இதற்கு நீண்ட நேரம் நடப்பது, பொருந்தாத காலணிகள் அணிவது போன்றவை முக்கிய காரணங்களாகும்.

சிலருக்கு வைட்டமின் B12 குறைபாடும் நரம்பு பாதிப்பை ஏற்படுத்தி குதிகால் வலியை அதிகரிக்கும்.

வைட்டமின் B12 நரம்பு ஆரோக்கியம், ரத்தச் சிவப்பணுக்கள் உருவாக்கம் மற்றும் உடலுக்கு ஆற்றல் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே வைட்டமின் B12 குறைந்தால் பாதங்களில் எரிச்சல், கூச்சம் மற்றும் வலி ஏற்படும்.

மேலும் வைட்டமின் D, கால்சியம் மற்றும் மெக்னீசியம் குறைபாடுகளும் எலும்பு, நரம்புகளை பலவீனப்படுத்தி குதிகால் வலிக்கு காரணமாகும்.

வைட்டமின் B3, வைட்டமின் C, வைட்டமின் E குறைபாடு குதிகால் தோல் வெடிப்பு மற்றும் வலியை ஏற்படுத்தக்கூடும்.

எனவே குதிகால் வலி நீடித்தால், மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது அவசியம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button