பலதும் பத்தும்

ஆடிப்பெருக்கு – தாலி கயிறு மாற்ற நல்ல நேரம் தெரியுமா?

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. ​கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும்.

​ இந்த நாளில் ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள்.

​விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை என்னும் முதுமொழி இதில் இருந்துதான் தோன்றியது.

​ ஆடிப்பெருக்கு:

​ அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள்.

​அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். மேலும் ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

​ வழிபடும் முறை:

​இப்படி ஆறுகளுக்கு சென்று ஆடிப்பெருக்கை கொண்டாட முடியாத மக்கள் கவலைப்பட வேண்டாம். ஆற்றுக்கு செல்ல முடியாதவர்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே விதம் விதமாக சமைத்து பலகாரம் செய்து, வீட்டு வாசலில் கோலம் போட்டு அலங்கரித்து காவிரியை, வைகையை, தாமிரபரணியை மனதால் வணங்கி ஆடி பதினெட்டாம் பெருக்கு இன்று கொண்டாடுவோம்.

​ பலன்கள்: ஆடிப்பெருக்கு நாளில் கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி வணங்குகின்றனர்.

​ஆடிப்பெருக்கு எப்போது? – தாலி கயிறு மாற்ற உகந்த நேரம்? சிறப்பு வாய்ந்த ஆடிப் பெருக்கு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் சுமங்கலிப் பெண்கள் புதிய மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வதற்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வேண்டி பூஜை செய்வதற்கும் காலை 07:45 முதல் 08:45 மணி வரையும், மாலை 03:15 முதல் 04:15 மணி வரையும் மிகச் சிறந்த நல்ல நேரமாகப் பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button