பலதும் பத்தும்

EX-க்கு Like போட்ட காதலன்: Thar-ஐ வெறும் ரூ. 5,000-க்கு விற்ற காதலி

முன்னாள் காதலியின் புகைப்படத்திற்கு காதலன் Like போட்டதால் காதலனுக்குச் சொந்தமான சுமார் ரூ. 20 இலட்சம் மதிப்பிலான Thar காரை வெறும் ரூ. 5,000-க்கு காதலி விற்றுள்ளார். இ ந்த சம்பவம் புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் காதலியின் திருமணப் புகைப்படத்திற்குக் காதலன் இன்ஸ்டாகிராமில் (Instagram) லைக் (Like) செய்ததால் ஆத்திரமடைந்த காதலி காதலுடன் சண்டையிட்டு அவ​ரது காரையும் விற்றுள்ளார்.

இந்நிலையில் தன் கார் காணாமல் போனதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த காதலன், நண்பர்களிடம் விசாரித்த பிறகே தனது காதலி செய்த இந்த அதிரடித் திருவிளையாடல் குறித்த முழு விபரமும் அவருக்குத் தெரியவந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button