பலதும் பத்தும்

எத்தனை நாட்கள் கோவிலுக்கு சென்றால் என்ன பலன் கிடைக்கும்?

பொதுவாக கோவிலுக்கு சென்று வழிபடுவதால் மன அமைதியும், நேர்மறை எண்ணங்களும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

தினமும் கோவிலுக்கு செல்வது சாத்தியமில்லாதவர்கள், முக்கிய நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இறை நம்பிக்கையுடன் கோவிலுக்கு சென்று வழிபடுவதால் நினைத்த காரியம் நடக்கும் என்று நம்பப்படுகிறது.

எத்தனை நாட்கள் கோவிலுக்கு சென்றால் என்ன பலன் கிடைக்கும்? | Visiting Temple Daily Spiritual Benefits

அதேபோல், தினமும் ஒரே கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இருப்பினும், தொடர்ந்து குறிப்பிட்ட நாட்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என ஆன்மீக நம்பிக்கைகள் கூறுகின்றன.

அந்தவகையில், தொடர்ந்து கோவிலுக்கு செல்வதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

7 நாட்கள் – தடைப்பட்ட திருமணம் கைகூடும்.

9 நாட்கள் – தரித்திரம் விலகும்.

11 நாட்கள் – கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

15 நாட்கள் – நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

21 நாட்கள் – குழந்தைச் செல்வம் கிடைக்கும்.

ஒரு மாதம் – அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும்.

48 நாட்கள் (ஒரு மண்டலம்) – ஆன்மீக பலன்கள் கிடைக்கும்.

108 நாட்கள் – தேவேந்திர பூஜை செய்த பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

1008 நாட்கள் – அஸ்வமேத யாகம் செய்த பலனும், முக்தியும் கிடைக்கும் என ஆன்மீக நம்பிக்கை உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button