பலதும் பத்தும்

தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

பழங்கள் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. அவற்றில் விலைக்குறைவாகவும், அதிக சத்துக்கள் கொண்டதாகவும் இருக்கும் பழம் கொய்யாப்பழம்.

கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.

தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது பல்வேறு உடல்நல நன்மைகளை அளிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைட்டமின் சி நிறைந்தது

கொய்யாப்பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட சுமார் 4 மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் | Health Benefits Of Eating Guava Every Day

 

அசிடிட்டி குறையும்

அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை குறைக்க கொய்யாப்பழம் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கிறது.

இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்

கொய்யாப்பழத்தில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் | Health Benefits Of Eating Guava Every Day

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

கொய்யாப்பழத்தின் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், இரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய செல்களை சேதத்திலிருந்து பாதுகாத்து, இதய நோய் அபாயத்தையும் குறைக்க உதவுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button