பலதும் பத்தும்

மனித இதயத்திற்குள் குட்டி மூளை!

மனித இதயத்திற்குள் குட்டி மூளை போன்று நரம்பு மண்டலம் ஒன்று இயங்கி வருவதை அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மனித உடலில் இரத்த ஓட்டத்திற்கு மிக முக்கிய காரணமான இதயத்திற்குள் ‘குட்டி மூளை’ போன்ற ஒரு நரம்பு மண்டலம் இயங்கி வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியில், இதயத்தைச் சுற்றி அமைந்துள்ள திசுக்களில் நரம்பணுக்களால் ஆன ‘உள் இதய நரம்பு மண்டலம்’ செயல்படுவது தெரியவந்துள்ளது.

மூளையில் இருந்து உத்தரவு வரும் வரை காத்திருக்காமல், இந்த நரம்பணுக்கள் தங்களுக்குள் தகவல்களைப் வேகமாக பரிமாறிக்கொண்டு, இதயத் துடிப்பை முறைப்படுத்துவதோடு, உடலியல் மற்றும் மன அழுத்தத்தின்போது இதயத்தைப் பாதுகாக்கும் உள்ளூர் கட்டுப்பாட்டு மையமாக செயல்படுகின்றன.

இந்த நரம்பு மண்டலத்தில் உள்ள குறிப்பிட்ட நரம்பணுக்கள், இதயத் துடிப்பு மிக வேகமாக அதிகரிக்கும்போது, அதைக் கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டுவர உதவுகின்றன.

மனித இதயத்திலும் இதேபோன்ற நரம்பணு அமைப்புகள் இருப்பதால், இதய நோய்கள் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு புதிய வைத்தியச் சிகிச்சைகளைக் கண்டறிய இந்த மகத்தான கண்டுபிடிப்பு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button