வரலாற்றை மாற்றிய மரண தணடனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி – பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்

தனக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது தொடர்பில் இருவர் மகிழ்ச்சியடைவார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, நீதிபதியிடம் தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள விவகாரம் நாட்டில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை தொடர்பாகவே பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தாக்குதல் நடைபெறக்கூடும் என முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், தனது பதவியைப் பயன்படுத்தித் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர், இன்றைய இந்த தீர்ப்பானது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைச் சுற்றியுள்ள சதித்திட்டத்தின் இறுதி முடிவாகும்.
இந்தத் தீர்ப்பைக் கேட்டு இருவர் மட்டுமே அளவில்லா மகிழ்ச்சியடைவார்கள், ஒருவர் ஆரம்பத்திலிருந்தே சட்டமா அதிபர் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்ட நிலந்த ஜெயவர்தன, மற்றவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுசுந்தரவிற்கும் அதே நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()