இலங்கை

காசாவில் போர் முடிவு வருவதாக ட்ரம்ப் அறிவிப்பு; ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்குமா?

நீண்டகாலமாக நீடித்து வந்த காசா போரை முடிவுக்குக் கொண்டுவர ‘காசா அமைதித் திணைக்களம் ‘ ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வரைவு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களைப் படிப்படியாக ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளது.

காசாவில் போர் முடிவு வருவதாக ட்ரம்ப் அறிவிப்பு; ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்குமா? | Trump Announces An End To The War In Gaza

காசாவின் நிர்வாகம் புதிய பாலஸ்தீன இடைக்கால நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். மேலும், இஸ்ரேலியப் படைகள் காசாவிலிருந்து வெளியேறிய பின், சர்வதேச அமைதிப்படை மற்றும் புதிய பாலஸ்தீன பொலிஸார் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கும் என தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் தனது படைகளை முழுமையாக திரும்பப் பெற்ற பிறகே ஆயுதங்கள் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்குமா என்பதில் இஸ்ரேலுக்குச் சந்தேகம் உள்ளது.

இந் நிலையில் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்பட்டாலும், இதன் முழுமையான அமுலாக்கம் இரு தரப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button