உலகம்
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கமொன்றில் வெடிப்பு – 34 பேர் பலி

தெற்கு பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமொன்றில் தொழிலாளர்கள் 34 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இந்த சம்பவத்தில் மேலும் பலர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்பு சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
![]()