பலதும் பத்தும்

ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழும் கிராம மக்கள்.., எங்கு தெரியுமா?

பொதுவாக, மனித உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன.

மனிதர்களால் ஒரு சிறுநீரகம் இல்லாவிட்டாலும் மற்றொரு சிறுநீரகத்தின் உதவியுடன் உயிர் வாழ முடியும்.

இதனால் சிலர் தங்களின் சிறுநீரகத்தை விற்கும் சம்பவங்கள் நடக்கின்றன.

ஆனால், நேபாளத்தில் உள்ள ஒரு கிராமம் சிறுநீரக விற்பனை காரணமாக உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நேபாளத்தின் காவ்ரேபிளாஞ்சோக் மாவட்டத்தில் உள்ள ஹோக்ஸே கிராமம், சிறுநீரகப் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.

இந்த கிராமத்தில் உள்ள பல குடும்பங்களில் குறைந்தது ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடும் வறுமை, கடன் மற்றும் அடிப்படை தேவைகளுக்கான பணத் தேவை காரணமாக பலர் சிறுநீரகத்தை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனை பயன்படுத்தி கொண்ட தரகர்கள், கிராம மக்களை ஏமாற்றி சட்டவிரோதமாக சிறுநீரகங்களை அகற்றி விற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழும் கிராம மக்கள்.., எங்கு தெரியுமா? | Nepals Kidney Valley Village In Tamil

பல கிராம மக்கள் தங்கள் சிறுநீரகங்களை 20,000 முதல் 70,000 நேபாள ரூபாய் வரை விற்றதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம் உறுப்பு கடத்தல் கும்பல்கள் குறைந்த விலையில் சிறுநீரகங்களைப் பெற்று அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடி மற்றும் நகங்களைப் போல சிறுநீரகமும் மீண்டும் வளரும் என்று கூறி, தரகர்கள் மக்களை ஏமாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழும் கிராம மக்கள்.., எங்கு தெரியுமா? | Nepals Kidney Valley Village In Tamil

மருத்துவ அறிவு மற்றும் கல்வியறிவு இல்லாததால் பலர் இந்தப் பொய்யை நம்பி சிறுநீரகத்தை விற்றதாகக் கூறப்படுகிறது.

சிறுநீரகத்தை விற்பது நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

மேலும், சட்டவிரோத அறுவை சிகிச்சைகள் காரணமாக பலர் உடல்நலக் குறைபாடுகள், மருத்துவ சிக்கல்கள், உளவியல் பாதிப்புகளை சந்தித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button