பலதும் பத்தும்
குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியர்

சென்னையில், குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குதிரையில் சென்று உணவு டெலிவரி
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பலவாக்கம் பகுதியில், ஜொமாட்டோ ஊழியர் ஒருவர் உணவு பார்சல்களுடன் வெள்ளை நிறக் குதிரையில் சென்றுள்ளார்.
பொதுவாக உணவு டெலிவரி ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வது வழக்கம்.
ஆனால், இந்த ஊழியர் குதிரையில் கம்பீரமாகச் சென்றது அந்த வழியாகச் சென்ற பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![]()