பலதும் பத்தும்

பீப் சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாத 7 உணவுகள்

பீப் என்பது அதிக புரதம் மற்றும் கொழுப்பு கொண்ட சிவப்பு இறைச்சி வகையாகும்.

பீப்பில் உடலுக்குத் தேவையான புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி ஆகியவை நிறைந்துள்ளன.

இது தசை வளர்ச்சியை மேம்படுத்துகிறது, உடல் வலிமையைக் கூட்டுகிறது மற்றும் ஆற்றலைத் தருகிறது.

பீப் சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாத 7 உணவுகள்.., என்னென்ன தெரியுமா? | 7 Food That Should Be Avoided After Eating Beef

எனவே, பீப் சாப்பிட்ட உடனே சில உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

இல்லையெனில் அஜீரணம், வயிற்று உப்புசம், அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

அந்தவகையில், பீப் சாப்பிட்ட பிறகு எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று குறித்து பார்க்கலாம்.

என்னென்ன உணவுகள்?

1. அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்-  பீப் சாப்பிட்ட உடனேயே ஐஸ்கிரீம், சீஸ் மற்றும் முழு கொழுப்புள்ள பால் போன்றவற்றை சாப்பிடுவது செரிமானம் தாமதமாகும்.

2. இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள்-  கேக், பேஸ்ட்ரி, ஐஸ்கிரீம் மற்றும் கார்பனேட்டட் குளிர்பானங்கள் போன்றவற்றை பீப் சாப்பிட்ட உடனே சாப்பிட்டால் வயிற்று உப்புசம் மற்றும் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும்.

3. அதிக புளிப்புள்ள உணவுகள்-  ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை மற்றும் அன்னாசி போன்ற புளிப்புச் சுவை கொண்ட உணவுகளை பீப் சாப்பிட்ட உடனே சாப்பிடுவது வயிற்று எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

4. எண்ணெயில் வறுத்த உணவுகள்-  சமோசா, பஜ்ஜி போன்ற எண்ணெயில் வறுத்த உணவுகளை பீப் சாப்பிட்ட பிறகு சாப்பிட்டால் அதிக கொழுப்பு காரணமாக செரிமானம் தாமதமாகி, அசிடிட்டி ஏற்படும்.

பீப் சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாத 7 உணவுகள்.., என்னென்ன தெரியுமா? | 7 Food That Should Be Avoided After Eating Beef

 

5. உடனடியாக பிளாக் டீ குடிப்பது-  பீப் சாப்பிட்ட உடனே அதிகமாக பிளாக் டீ குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. தேநீரில் உள்ள டானின்கள், உணவில் உள்ள சில ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதை பாதிக்கக்கூடும்.

6. ஜெல்லி மற்றும் ஜெலட்டின் உணவுகள்-  பீப் சாப்பிட்ட உடனே ஜெல்லி, ஜெலட்டின் கலந்த உணவுகள் மற்றும் மிட்டாய்களை சாப்பிடுவைத்தால் வயிற்றில் கனமான உணர்வை ஏற்படுத்ததும்.

7. பச்சை காய்கறிகள்-  பச்சை புரோக்கோலி, முட்டைகோஸ் மற்றும் காலிஃபிளவர் போன்றவற்றை பீப் சாப்பிட்ட உடனே அதிகமாக சாப்பிடுவது சிலருக்கு வாயுத்தொல்லை மற்றும் வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button