பலதும் பத்தும்

90 ஆண்டுகால வரலாற்றில் புதிய அத்தியாயம் ; இரு சீனர்களுக்கு பீல்ட்ஸ் மெடல்

உலக அளவில் கணிதத் துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ‘பீல்ட்ஸ் மெடல்’ (Fields Medal) விருது, முதல் முறையாக இரு சீன அறிஞர்கள் வென்று புதிய வரலாறு படைத்துள்ளனர்

இவ்விழாவானது அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 40 வயதிற்குட்பட்ட சிறந்த கணித அறிஞர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை, முதல் முறையாக இரு சீன அறிஞர்கள் வென்று புதிய வரலாறு படைத்துள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த யு டெங் மற்றும் சீனாவில் பிறந்த கணிதவியலாளரான ஹாங் வாங் ஆகியோர் இந்த ஆண்டுக்கான பீல்ட்ஸ் மெடல் விருதைப் பெற்றுள்ளனர்.

இதன்மூலம், சுமார் 90 ஆண்டுகால பீல்ட்ஸ் மெடல் விருது வரலாற்றில் இந்த உயரிய விருதைப் பெறும் மூன்றாவது பெண்மணி என்ற பெருமையை ஹாங் வாங் பெற்றுள்ளார்.

1900ஆம் ஆண்டு ஜெர்மன் கணிதவியலாளர் டேவிட் ஹில்பர்ட் முன்வைத்த வாயுக்களின் இயக்கம் தொடர்பான நூற்றாண்டு கால கணிதப் புதிருக்கு யு டெங் தீர்வு கண்டதற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று, 1917ஆம் ஆண்டு ஜப்பானிய கணிதவியலாளர் சோய்ச்சி ககேயா முன்வைத்த கணிதப் பிரச்சினைக்கு முப்பரிமாண வடிவியல் அணுகுமுறையில் தீர்வு கண்டதற்காக ஹாங் வாங் உலகளாவிய பாராட்டைப் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டுக்கான பீல்ட்ஸ் மெடல் விருதை அமெரிக்காவின் ஜான் பார்டன் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜேக்கப் சிம்மர்மன் ஆகியோரும் பெற்றுள்ளனர்.

கணித ஆராய்ச்சியில் புதிய மைல்கற்களை எட்டிய இந்த அறிஞர்களின் சாதனை, உலக அறிவியல் சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இளம் ஆராய்ச்சியாளர்களுக்கும் புதிய ஊக்கமாக அமைந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button