இலங்கை

அர்ச்சுனாவைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமைகளை ஆற்றிக்கொண்டிருந்தபோது, ​​அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகத் தவறியதையடுத்து இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​அவரது ஜாமீன்தாரர்களும் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button